×

மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அறிவியல் மனப்பான்மை என்பது, யார் சொன்னாலும் உன் அறிவுக்கு எது சரியானதோ அதை ஏற்றுக் கொள்வது. பகுத்தறிவது” என்ற தந்தை பெரியார் பாதையில் நடைபோட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில் “அறிவியலைக் கொண்டாடுவோம்” எனும் கலந்துரையாடல் நிகழ்வைத் தொடங்கி வைத்தோம்.

சேலம் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையும் டார்வின் அறிவியல் மன்றமும் இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தோம். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

The post மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anil Mahesh ,Chennai ,Tamil Nadu School Education ,Anbil Mahesh ,Minister Anbil Mahesh ,
× RELATED பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்;...